நடிகர் விஷால் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வைத்து வருகிறார். இதற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவராக இருந்தார்.
அந்த சமயத்தில் தன்னிடம் வந்த திரைப்படங்கள் குறித்த பிரச்சினைகளை அவர் ஒரு சார்பு தன்மையுடன் கையாண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தது. சொல்லப்போனால் அவர் கட்டப்பஞ்சாயத்து செய்தார் என்று கூட சிலர் சொல்வார்கள். அதனால் தான் அவர் அடுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி, விஷால் நடிகராக இல்லை என்றால் கட்டப்பஞ்சாயத்து செய்ய போயிருக்கலாம் என்று கூறியுள்ளார். அவர் அப்படி சொனது எதனால் தெரியுமா..? ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் சைரன். இந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படு பிஸியாக கலந்து கொண்டு வருகிறார் ஜெயம் ரவி.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான கலக்கப்போவது யாரு பாலா பேசும்போது, குறிப்பிட்ட சில நடிகர்களை சொல்லி இவர்கள் நடிக்க வராமல் போயிருந்தால் இவர்கள் எந்த வேலைக்கு பொருத்தமாக இருந்திருப்பார்கள் என்று நகைச்சுவையாக கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு ஜெயம் ரவியும் நகைச்சுவையாகவே பதில்களை கூறினார். அப்படி விஷாலின் பெயரை சொல்லி கேட்டபோது அவர் கட்டப்பஞ்சாயத்து செய்வது பொருத்தமாக இருக்கும் என்று ஜாலியாக பதில் சொன்னார் ஜெயம் ரவி.