spot_img
HomeNewsசிவகார்த்திகேயன் இப்படி பேசலாமா ? ஆரம்பத்திலேயே அமரன் கிளப்பிய சர்ச்சை

சிவகார்த்திகேயன் இப்படி பேசலாமா ? ஆரம்பத்திலேயே அமரன் கிளப்பிய சர்ச்சை

கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அந்த படத்திற்கு அமரன் என டைட்டில் வைத்து அதன் டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராணுவ போரில் வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது இந்த டீசரில் இருந்து தெரிகிறது. முழுக்க முழுக்க ராணுவ பின்னணியை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது.

இதில் சிவகார்த்திகேயன் அனல் பறக்க வசனங்கள் பேசியுள்ளார். அதே சமயம் அவர் அப்படி பேசும் வசனங்களில் ஒரு சில கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. சமீப காலமாக விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் இடம் பெறுவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

விஜய், சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படங்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கின்றார்கள் என்பதால் காட்சிகளில் மட்டுமில்லாமல் வசனங்களிலும் அவர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என பலரும் தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Must Read

spot_img