பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது அற்புதமான குரலில் வெளியான பாடல்களுக்காக பிரபலமானதை விட கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி தான் இன்னும் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து வைரமுத்து மீது மட்டுமல்லாமல் சினிமாவில் இதுபோன்று குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களைப் பற்றி அவ்வப்போது தனது கண்டனங்களையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.
அது மட்டுமல்ல முன்னணி நடிகைகள் பலருக்கும் இவர்தான் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். இவர் மீது டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி நடவடிக்கை எடுத்து தமிழில் டப்பிங் பேச முடியாதபடி செய்து விட்டார். ஆனாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தான் இயக்கிய லியோ படத்திற்கு திரிஷாவின் கதாபாத்திரத்திற்காக தமிழில் சின்மயியை தான் டப்பிங் பேச வைத்தார்.
இது சங்கத்தின் விதிமுறையை மீறிய செயல் என்பதால் லோகேஷ் கனகராஜ் மீது டப்பிங் சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர். இப்படி சங்கத்தின் செயல்பாடுகளை மீறி யாரையேனும் டப்பிங் பேச வைத்தால் அதற்காக சங்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக செலுத்த வேண்டும் என்கிற இன்னொரு விதியும் உண்டு. அதன்படி சின்மயியை பேச வைப்பதற்காக லோகேஷ் கனகராஜ் 50 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை கட்டினாராம்.