spot_img
HomeNews“என்னைய மட்டும் கொல்லாம விட்டிருந்தாங்கன்னா...” ; வருந்தும் நடிகர்

“என்னைய மட்டும் கொல்லாம விட்டிருந்தாங்கன்னா…” ; வருந்தும் நடிகர்

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி என ஒவ்வொரு மொழியிலும் வெற்றி பெற்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் எனத் தொடர்ந்து எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சில படங்கள் எடுக்கும் போதே அதிக நேரம் ஓடும் விதமாக உருவானதால் அதை இரண்டாகப் பிரித்து இரண்டாம் பாகம் என வெளியிட்டார்கள்.

ஆனால் தற்போது பலர் ஏற்கனவே ஓடி ஹிட்டான படத்திற்கு மீண்டும் ஒரு கதையை உருவாக்கி இரண்டாம் பாகம் எடுத்து வருகிறார்கள். அதே சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய கைதி படத்தில் அடுத்த படத்திற்கு தேவைப்படும் ஒரு லீட் வைத்து கதையை முடித்தார். அது மட்டுமல்ல இந்த படத்தின் கதையை அடுத்ததாக தான் இயக்கிய விக்ரம் படத்துடன் தொடர்புபடுத்தி எல்சியு என்கிற புதிய விஷயத்தை உருவாக்கினார்.

அதற்கேற்றார் போல் கைதியில் நடித்த ஒரு சில நடிகர்களை விக்ரம் படத்தில் பயன்படுத்தினார். இனி அடுத்தடுத்து இதை வைத்து எல் சி யு மூலம் உருவாக இருக்கும் படங்களுக்கு முந்தைய பாகங்களில் நடித்த நடிகர்களை பயன்படுத்தவும் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி லோகேஷ் கனகராஜ் படம் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் வில்லன் நடிகரான அர்ஜுன் தாஸ் இவர் கைதி படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பு பெற்றவர்.

ஆனால் அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் இறுதியில் கொல்லப்பட்டு விடும். இதனால் இவரால் விக்ரம் படத்தில் இடம்பெற முடியவில்லை. அதேபோல இனி அடுத்து எடுக்கப்பட இருக்கும் கைதி 2 படத்திலும் என்னால் இடம் பெற முடியாது.. என்னை மட்டும் அந்த படத்தில் கொல்லாமல் இருந்திருந்தால் நானும் கைதி 2 படத்தில் இடம் பிடித்திருப்பேனே என்று பார்ப்பவர்களிடம் வருத்தத்துடன் கூறி வருகிறாராம் அர்ஜுன் தாஸ்.

Must Read

spot_img