spot_img
HomeNewsஇவ்வளவு பில்டப் கொடுத்த சிம்பு இப்படி செய்யலாமா ?

இவ்வளவு பில்டப் கொடுத்த சிம்பு இப்படி செய்யலாமா ?

சிம்பு தற்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு தாமதமானாலும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் வரலாற்று காலத்தில் எடுக்கப்பட்ட தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அதனால் ரசிகர்கள் பலரும் சிம்பு தற்போது நடித்து வரும் படத்திலிருந்து தான் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றும் இதுவே இப்படி இருந்தால் படம் எப்படி மாஸாக இருக்கும் என்று ஆளாளுக்கு புகழ்ந்து வந்தனர்.

ஆனால் அவர்களை எல்லாம் காற்றுப்போன பலூன் போல புஸ்ஸாகும் விதமாக, இது நான் நடிக்கும் படம் அல்ல இது நான் நடித்துள்ள விளம்பர படம் என்று கூறி அவர்கள் உற்சாகத்தை குறைத்து விட்டார் சிம்பு. இவ்வளவு பில்டப்புடன் இந்த வீடியோவை வெளியிட்ட சிம்பு இப்படி செய்யலாமா என ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Must Read

spot_img