மலையாளத்தில் பெரிய அளவில் பிரபலம் இல்லாத நடிகர் நடிகை நடித்த ஒரு படம் இயக்குனர் ராஜமவுலி வரை கவனம் பெற்று அந்த படக்குழுவினரை தனது வீட்டிற்கே வரவழைத்து ராஜமவுலி பாராட்டி உள்ளது தான் தற்போது மலையாள திரையுலகில் மிக ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் அவ்வப்போது சின்ன பட்ஜெட்டில் ஏதாவது படங்கள் வெளியாகி பல கோடிகள் வசூலிக்கும் அளவிற்கு ஹிட் ஆகிவிடும். அப்படி பத்து நாட்களுக்கு முன்பு வெளியான படம் தான் ‘பிரேமலு’. இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 50 கோடியை தாண்டி வசூலித்து உள்ளது.
இதை தொடர்ந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற தமிழ் மற்றும் தெலுங்கில் சிலர் முயற்சி செய்து வந்தாலும் இந்த படக்குழுவினர் தங்கள் படத்தை ரீமேக் செய்யாமல் நேரடியாக சம்பந்தப்பட்ட மொழிகளிலேயே டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்து விட்டனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் ராஜமவுலியின் மகனும் இயக்குனருமான எஸ்எஸ் கார்த்திகேயாவை இந்த படம் ரொம்பவே கவர்ந்து விட்டது.
அந்த விதமாக இந்த படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கு இந்த படக்குழுவிற்கு வழிகாட்டி உள்ளார். எஸ்.எஸ்.கார்த்திகேயா. அவர் மூலமாக இந்த விஷயம் ராஜமவுலிக்கும் தெரியவர இந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.