சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட தோல்வியை தழுவியது. அதற்கு காரணம் என சொல்லப்படுவது இந்த படத்தில் ஏற்கனவே விக்ராந்த், விஷ்ணு விஷால் என இரண்டு இளம் கதாநாயகர்கள் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது தான்.
ஆனால் அதனை முழு நீள கதாபாத்திரமாக மாற்றியதன் விளைவுதான் இந்த படம் தோல்வியை கழுவி உள்ளது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதேபோலத்தான் பல வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடித்த கத பறையும்போல் என்கிற மலையாள வெற்றி படத்தை தமிழில் குசேலன் என்கிற படமாக ரீமேக் செய்து எடுத்தார் இயக்குனர் பி வாசு.
சந்திரமுகி என்கிற வெற்றி படத்தை கொடுத்ததால் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை இயக்கும் பொறுப்பை ரஜினிகாந்த் கொடுத்திருந்தார். அவர் ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டும் கூட, மலையாளத்தில் மம்முட்டி கொஞ்ச நிமிடமே வந்து செல்லும் காட்சிகளை ரஜினிகாந்த் படம் முழுவதும் வருவது போல அவரது ரசிகர்களுக்காக மாற்றினார் பி வாசு.
ஆனாலும் கிளைமாக்ஸில் மட்டும் ரஜினிகாந்தை ரசித்த ரசிகர்கள் படம் முழுவதும் அவரை ரசிக்க முடியவில்லை. கதையுடன் அவரால் ஒன்ற முடியவில்லை. அதனாலேயே அந்த படம் தோல்வி அடைந்தது. அப்போது பி வாசு செய்த அதே தவறை தான் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்துள்ளார் என்பதை அவரே இப்படி கூறியதன் மூலம் ஒப்புக்கொண்டு விட்டார்.