கடந்த மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது அவ்வளவாக பிரபலமில்லாத இளைஞர்கள் 10 பேர் இணைந்து நடித்த இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் கேரளாவை விட தமிழகத்தில் தான் இந்த படத்திற்கு அதிக வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. இங்குள்ள எல்லோருமே இந்த படத்தை பாராட்டி வருகின்றார்கள். பாராட்ட மனம் இல்லாதவர்கள் கூட யாரும் குறை சொல்லவில்லை.
ஆனால் பிரபல எழுத்தாளர் என்று சொல்லப்படுகிற ஜெயமோகன் இந்த படத்தைப் பற்றி விமர்சித்திருந்தால் கூட பரவாயில்லை. இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள். அந்த ஊர் மக்கள் ஆகியவற்றை குறித்து கேரளா பொறுக்கிகள் என்பது போன்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இவரது இந்த விமர்சனம் இவருக்கே திருப்பி அடிப்பது போல பலரும் இவருக்கு கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் தமிழக திரையுலகில் எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்கும் நடிகர், இயக்குனர் பாக்யராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசும்போது அந்த எழுத்தாளரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்,
இது குறித்து அவர் பேசும்போது, “நம் கலாச்சாரம் இன்னொருவரை பற்றி குறை சொல்வது அல்ல.. மனம் விட்டு பாராட்டுவது.. குறை சொன்னாலும் கூட படத்தையோ அல்லது அதில் உள்ள சில அம்சங்களை தான் குறை சொல்வோமே தவிர, இப்படி தனிப்பட்ட மனிதர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது. இந்த படம் இங்கே வெளியான போது அந்த எழுத்தாளர் பேசிய சமயத்திலேயே பதில் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அந்த சமயத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிடும் என்பதால் அமைதியாக காத்திருந்தேன்” என்று கூறியுள்ளார்.