யோகி பாபு தற்போது ஒரு பக்கம் கதையின் நாயகனாக நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் முக்கியமான படங்களில் காமெடி நடிகராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதிலும் சிறப்பான படங்களை கொடுக்கும் இயக்குனர் என்றால் சம்பளத்தை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் அழைப்பை ஏற்று நடித்துக் கொடுத்து வருகிறார்.
அப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கர் பச்சான் இயக்கத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. இதைத்தொடர்ந்து தற்போது உணர்வுப்பூர்வமான படங்களை எடுக்கும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை என்கிற படத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இந்த படத்தில் ஏகன் என்பவர் அறிமுக கதாநாயகனாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் இவரின் நடிப்பை வியந்து பாராட்டிய யோகி பாபு, “நீ நன்றாக நடிக்கிறாய்.. இதை அப்படியே தக்க வைத்துக்கொள். அதேசமயம் நாளைக்கு உனக்கு நல்ல அளவில் பெயரும் மார்க்கெட்டும் கிடைத்தால் உடனடியாக பணத்தின் பின்னால் போகாதே.. நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து சினிமாவில் நிலைத்து நிற்க முயற்சி செய்ய வேண்டும்” என அறிவுரை கூறியுள்ளார்.