spot_img
HomeNewsதிறப்பு விழாக்களுக்கு ஏன் செல்வதில்லை ? ; ரஜினி சொன்ன ‘அடடே’ தகவல்

திறப்பு விழாக்களுக்கு ஏன் செல்வதில்லை ? ; ரஜினி சொன்ன ‘அடடே’ தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியை பொறுத்தவரை தன்னுடைய படங்களின் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வார். நாடகங்கள், கருத்தரங்கங்கள், தலைவர்களின் நினைவஞ்சலி கூட்டங்கள், சினிமாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொண்டு தனது சிறப்பான பங்களிப்பை தந்து வருகிறார்.

ஒவ்வொரு விழாவிலும் இவர் பேசும் பேச்சைக் கேட்பதற்கு என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். அதே சமயம் இவர் கடந்த பல வருடங்களாகவே எந்த ஒரு திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை சென்னையில் வடபழனிகள் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ஆச்சரியமாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “நான் பெரும்பாலும் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. காரணம் அப்படி எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அந்த நிறுவனத்தில் இவரும் ஒரு பார்ட்னர் தான் என்பது போன்று செய்திகள் வெளியாகி விடுகின்றன. அதை தவிர்ப்பதற்காகவே நான் திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதில்லை.

அதே சமயம் இது மருத்துவமனை திறப்பு விழா. என்னுடைய வாழ்க்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் எந்த அளவிற்கு முக்கியமானவர்கள் என்பதை நான் அறிவேன். அதை சொல்வதற்கு சரியான நபர் நான் என்பதால் தான் என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள்.. அதனாலேயே இங்கே வந்துள்ளேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img