spot_img
HomeNewsஇளையராஜாவின் பயோபிக்கை இயக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா ?

இளையராஜாவின் பயோபிக்கை இயக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா ?

இந்திய சினிமாவில் அவ்வப்போது பல ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாறு குறித்த சுயசரிதை படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகி வருகின்றன. பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் இவர்களின் வாழ்க்கை வரலாறுகள் தான் பயோபிக் படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய திரை உலகின் இசை மேதை மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது என்றும் அதில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்றும் கடந்த சில மாதங்களாகவே ஒரு பரபரப்பான தகவல் அடிபட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அது உண்மைதான் என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு இளையராஜா என்கிற பெயரிலேயே திரைப்படமாக இருக்கிறது. இதில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை இயக்கப் போவது தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான். இந்த படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், வெற்றிமாறன், தனுஷ், இளையராஜா ஆகியோருடன் சேர்ந்து கலந்து கொண்டனர், அதே சமயம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. கேப்டன் மில்லர் படத்தின் மூலம் தனுஷுக்கு பிடித்த இயக்குனராக அருண் மாதேஸ்வரன் மாறிவிட்டார்.

ஆனால் அவர் இதுவரை இயக்கிய படங்கள் எல்லாம் அடிதடி ரத்தம் சண்டை வெட்டு குத்து என்பது தான். அப்படிப்பட்டவர் மென்மையான இந்த இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை எப்படி எடுக்கப் போகிறார் என்பது குறித்து இப்போதே பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வெளியாக துவங்கியுள்ளன.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க வேறு இயக்குனர்களே கிடைக்கவில்லையா என்றும் பலர் விமர்சிக்க துவங்கியுள்ளனர். இதையெல்லாம் தாண்டி இந்த படத்தை எப்படி வெற்றிகரமாக ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் தரப் போகிறார்கள் என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img