spot_img
HomeNewsராஜமவுலியை சந்திக்க கொட்டும் பனியில் காத்திருந்த 83 வயது ஜப்பானிய மூதாட்டி

ராஜமவுலியை சந்திக்க கொட்டும் பனியில் காத்திருந்த 83 வயது ஜப்பானிய மூதாட்டி

பிரம்மாண்ட படங்கள் என்றாலே ஒரு காலத்தில் இயக்குனர் ஷங்கர் ஞாபகத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு இயக்குனர் ராஜமவுலியும் வந்து சேர்ந்து கொண்டார். அவரது பாகுபலி படம் இந்தியாவையும் தாண்டி உலக அரங்கில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது.

பல நாடுகளிலும் இந்த படம் மொழிமாற்றம் செய்து திரையிடப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை தொடர்ந்து இந்த படத்தின் மீதான உலக ரசிகர்களின் கவனம் இன்னும் அதிகம் திரும்பியது. குறிப்பாக ஜப்பானில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் இந்த படம் ஜப்பானில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இந்த படத்தின் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. மேலும் இந்த காட்சி திரையிடப்பட்ட போது இயக்குனர் ராஜமவுலியும் ரசிகர்களுடன் சேர்ந்து ஜப்பானில் இந்த படத்தை பார்த்தார்.

அதன் பிறகு அங்குள்ள ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக 83 வயதான ஜப்பானிய பெண் ரசிகை ஒருவர் தன் கைப்பட செய்த பரிசு பொருளுடன் கொட்டும் பணியில் நீண்ட நேரமாக காத்திருந்தார். அவர் தான் வந்திருக்கும் செய்தியை ராஜமவுலிக்கு அனுப்பியதும் அதை படித்துவிட்டு உடனடியாக வெளியே வந்து அந்த பெண்மணியை அழைத்துச் சென்று அவருடன் நீண்ட நேரம் பேசி அவருடைய பாராட்டுகளை பரிசுகளை ஏற்றுக் கொண்டாராம் ராஜமவுலி.

ஒரு படம் நாடு தாண்டி எண்பத்தி மூன்று வயதான ஒரு பெண்மணியையும் கவர்ந்துள்ளது என்றால் இதைவிட ராஜமவுலிக்கு வேறு என்ன மிகப்பெரிய பரிசு கிடைத்துவிடப் போகிறது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img