ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் போதும் உடனே அல்லது சில வருடங்கள் கழித்து கூட அந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். குறிப்பாக பல இயக்குனர்களுக்கும் பல ஹீரோக்களுக்கும் தங்களது திரையுலக பயணத்தில் ஏதாவது சரிவு வரும்போது தாங்கள் நடித்து ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து அதன் மூலம் எப்படியாவது இன்னொரு வெற்றியை பெற்று விடலாம் என்பதற்காகவே இந்த இரண்டாம் பாகத்தை எடுப்பார்கள்.
ஆனால் எல்லா ஹீரோக்களுக்கும் எல்லா இயக்குனர்களுக்கும் இந்த இரண்டாம் பாக சென்டிமென்ட் கை கொடுக்கிறதா என்றால் இல்லை. சிங்கம் 2 சூர்யாவுக்கும் இயக்குனர் ஹரிக்கும் கை கொடுத்தது. ஆனால் சாமி 2 விக்ரமுக்கும் இயக்குனர் ஹ்ரிக்கும் கை கொடுக்கவில்லை. இது போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன.
ஆனால் ஒரே ஒரு ஹீரோவுக்கு மட்டும் இரண்டாம் பாக படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது ஆச்சரியம் தான். அவர் வேறு யாருமில்லை அகில உலக சூப்பர் ஸ்டார் என சொல்லப்படுகின்ற நடிகர் சிவா தான். இவர் ஏற்கனவே நடித்த கலகலப்பு, தமிழ் படம், சென்னை 28 ஆகிய படங்களுக்கு இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் பெற்று விட்டன.
தற்போது சூது கவ்வும் பார்ட் 2 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சிவா. முதல் பாகத்தில் இவர் நடிக்கவில்லை என்றாலும் கூட இரண்டாம் பாகத்தில் நடிப்பதால் ஏற்கனவே இவருக்கு ஒர்க்கவுடான இரண்டாம் பாக செண்டிமெண்ட் இந்த படத்திலும் ஒர்க் அவுட் ஆகி படம் வெற்றி பெற்று விடும் என படக்குழுவினர் நம்புகின்றனராம்.