ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் ரெபல் என்கிற படம் வெளியானது. இன்னும் சில நாட்களில் கள்வன் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களான பேரரசு, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் பலர் கலந்து கொண்டனர். பொதுவாக இது போன்ற இசை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்பவர்கள் பேசும்போது படம் குறித்து ஏதாவது ஒன்றை பாசிட்டிவாக பேசி படக்குழுவினருக்கு உற்சாகம் அளிப்பார்கள். இயக்குனர் பேரரசு அந்த வகையைச் சேர்ந்தவர் தான்.
யார் என்றே தெரியாத புது முகங்கள் நடிக்கும் பட விழாக்களில் கலந்து கொண்டு கூட ஆகா ஓகோ என பாராட்டுவார். அப்படிப்பட்டவர் ஜிவி பிரகாஷ், பாரதிராஜா நடித்து இருக்கும் இந்த படத்தை சும்மா விட்டு விடுவாரா ?
மேடையில் அவர் பேசும்போது பொதுவாகவே யானை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படத்திலும் யானை இருக்கிறது. யானை செண்டிமெண்ட் பெரும்பாலும் ஒர்க் அவுட் ஆகும். அதனால் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார்.
அதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் பேச வந்தார். அவர் தன்பாட்டிற்கு படத்தை வாழ்த்தியோ வேறு விதமாக விமர்சித்தோ கூட பேசிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் மைக்கை பிடித்த வெற்றிமாறன் யானை நடித்தாலும் சரி, டைனோசர் நடித்தாலும் சரி கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என்று பேரரசு கூறியதற்கு ஒரு பதிலடி தருவது போல பேசிவிட்டு சென்று அமர்ந்தார்.
இதைக் கேட்ட இயக்குனர் பேரரசு ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இயக்குனர் வெற்றிமாறன் கொஞ்சமாவது இங்கிதமாக நடந்து கொள்ளக் கூடாதா என்று சோசியல் மீடியாவில் அவரைப் பற்றி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.