spot_img
HomeCinema Reviewஹாட்ஸ்பாட் - விமர்சனம்

ஹாட்ஸ்பாட் – விமர்சனம்

நான்கு கதைகள், நான்கு இயக்குனர் என்று ஏற்கனவே படம் வந்திருக்கிறது. ஆனால் ஒரே இயக்குனர் நான்கு கதைகள்.. இதுதான் ஹாட்ஸ்பாட் இன் மூலக்கதை.

முதல் கதை தாய் வீட்டு பாசம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக திருமணத்தில் ஆணுக்கு பெண் தாலி கட்டி ஆண் சமையல் அறையிலும் பெண் வேலைக்கு போவதும் என நகைச்சுவையை கலந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது கதை ஒரு காதல் கதை. ஆனால் காதலித்தவர்கள் அண்ணன் தங்கை ஆகிறார்கள். ஆனால் முடிவு சொல்லவில்லை. மூன்றாவது ஆன் விபச்சாரம். நான்காவது குழந்தை தொழிலாளர்களை பற்றி.. இந்த படத்தில் முக்கிய கதையை இதுதான்..

முதல் கதையில் ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும் நடித்திருக்கிறார்கள். இருவரும் காதலர்களாக இருக்க காலம் மாறிய நிலையில் பெண் ஆணுக்கு தாலி கட்டப் போய் என்ன நடந்தது என்ற நிகழ்வுகளாக நகர்கிறது கதை. பெண்ணியத்தைப் போற்றும் இந்தக் கதையை ரசித்து வரவேற்க முடிகிறது.

சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் நடித்திருக்கும் இரண்டாவது கதை ஒரு மாதிரியாக ஆரம்பித்து ஒரு மாதிரியாகவே முடிகிறது. இந்த கதைக்கு இயக்குனராலேயே முடிவு சொல்ல முடியவில்லை என்பதால் ஒரு மாதிரி முடித்து வைக்கிறார்.

மூன்றாவது கதை படு அபத்தம். அலுவலக டாய்லெட்டிலேயே சுய இன்பம் செய்யும் சுபாஷ், அது வெளியே தெரிந்த காரணத்தால் வேலை பறிபோக, தொடர்ந்து வேலையில்லாத காரணத்தால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டு ஆண் விபச்சாரி ஆகிறார். இதனால் ஜனனியுடன் இருந்த அவரது புனிதமான காதல் என்ன ஆனது என்று போகிறது கதை.

நான்காவது கதை டிவி ஷோக்களைப் பற்றியது. அதிலும் சிறுவர் சிறுமிகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் ஷோக்களில் அவர்களுடைய மனநிலையும் உடல் நிலையும் எத்தனை பாதிக்கப்படுகிறது என்பதைச் சொல்லி வெளியில் குழந்தைகளை வேலைக்கு வைத்தால் அது குற்றம் எனில் டிவி ஷோக்களில் குழந்தைகளை இந்தப் பாடு படுத்துவது எதில் சேர்த்தி என்கிற வினாவை கலையரசன் மூலமாக முன் வைக்கிறார் இயக்குனர்.

இதில் வரவேற்கத்தக்கக் கூடிய விஷயம் என்றால் நான்காவது கதையை சொல்லலாம்.படம் பார்க்க வரும் ஒவ்வொருவரும் ஒரே மன நிலைமையில் இருப்பதில்லை என்பதற்காக இயக்குனர் கயிறு அடித்திருக்கிறார் இம்மாதிரி கதைகளை.

ஆனால், இந்த படம் கவனிக்ப்பட வேண்டும் என்பதற்காகவே ஆணுக்குப் பெண் தாலி கட்டுவது, லெஸ்பியானிசம், அண்ணன் தங்கை காதல், சுய இன்பம், அம்மாவுக்கும் மகனுக்குமான பாலியல் குழப்படிகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் என்று சமுதாயத்தில் முகம் சுளிக்க வைக்கும் அத்தனை விஷயங்களையும் இயக்குனர் வரிசைக் கட்டி எடுத்திருப்பது வெறும் பரபரப்புக்காக மட்டுமே என்பது  புலனாகிறது

இசையமைப்பாளர் படத்தின் தன்மையை புரிந்து கொண்டு வித்யாசமான இரண்டு பாடல்களை இசைத்து இருக்கிறார். பின்னணி இசையும் பாராட்டும்படி இருக்கிறது. ஒளிப்பதிவும் படத்துக்கு கை கொடுத்திருக்கிறது.

வித்தியாசம் கதையில் ஒரு பரபரப்பு வேண்டும் என்பதற்காக அண்ணன் தங்கை காதல் சுய இன்பம் இதெல்லாம் வெட்ட வெளிச்சமாக திரையில் காட்ட வேண்டுமா என்ன நம் மனதில் இந்த கேள்விகள் எழுவது நிஜம்.

படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img