spot_img
HomeNewsஎதிர்பாராமல் அமைந்த சர்ப்ரைஸ் கூட்டணி

எதிர்பாராமல் அமைந்த சர்ப்ரைஸ் கூட்டணி

சூர்யா நடிப்பில் கடைசியாக 2022ல் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. சூரரைப்போற்று, ஜெய்பீம்வெற்றியை தொடர்ந்து வெளியான இந்த படம் வரவேற்பை பெற தவறிய நிலையில், இந்த இரண்டு வருடங்களில் சூர்யா ஹீரோவாக நடித்த படம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.  அதே வருடத்தில் விக்ரம் மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில்  கெஸ்ட் ரோல்களில் மட்டுமே சூர்யாநடித்து இருந்தார்.

தற்போது கங்குவா படத்தில் நடித்துவரும் சூர்யா, அதற்கு அடுத்ததாக வெற்றிமாறன், சுதா கொங்கரா  என அடுத்தடுத்த  இயக்குனர்களின் படங்களின் நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பு மட்டுமே வெளியாகி இருக்கிறது. அநேகமாக கங்குவா இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு புது காம்பினேஷனாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இது அவரது 44-வது படமாக உருவாக இருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா போன்றவர்களை வைத்தே  படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் திடீரென  பரமபத ஏணி கிடைத்தது போல ரஜினியை வைத்து ‘பேட்ட’  படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என முன் வரிசை நடிகர்களின் படங்களை இயக்குவார் என நினைத்தாலும் தனுஷ், விக்ரம், லாரன்ஸ் படங்களை இயக்கி விட்டு
இப்போது தான்  சூர்யாவிற்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img