சினிமா பிரபலங்களின் விவாகரத்து என்பது மற்ற எந்த துறையையும் விட அதிகம் கவனித்து பார்க்கப்படுகிறது. அதனால் சினிமா தம்பதிகள் பலரும் பிரிந்து வாழ்வதே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். சிலர் பிரிவு வெளியே தெரிந்தாலும் விவாகரத்திற்கு விண்ணப்பிக்காமல் தங்களது வாழ்க்கையை தொடர்கின்றனர்.
இன்னும் சிலர் வெளிப்படையாகவே விவாகரத்து பெற்று தாங்கள் விரும்பிய படி வாழ்கின்றனர். அந்த வகையில் பார்த்திபன்-சீதா, நளினி-ராமராஜன் இவர்கள் எல்லாம் விவாகரத்து பெறாமலேயே இப்போது வரை பிரிந்து வாழ்கின்றனர், ஆனால் நல்லது கெட்டது போன்ற விஷயங்களில் தங்களது குழந்தைகளின் நலனை முன்னிட்டு ஒன்று சேர்ந்து கலந்து கொள்கின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வில்லனாக, விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவருக்கும் இவரது மனைவி ஆலியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். இடைப்பட்ட காலகட்டத்தில் இருவருக்கும் இடையே மிகப் பெரிய வார்த்தை போர் அடிக்கடி நடந்தன.
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி கொடுத்தார்கள். ஆனாலும் தற்போது தங்களது குழந்தைகளின் எதிர்கால நலனை முன்னிட்டு விவாகரத்து எண்ணத்தை கைவிட்டு தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்து உள்ளார்களாம்.. நல்ல முடிவு தான்..