சினிமாவில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும், கீழே இருப்பவர்கள் யார் திடீரென கோபுரத்தின் மேலே போய் அமர்வார்கள் என்றெல்லாம் கணித்து கூற முடியாது. ஒரு பக்கம் அதிர்ஷ்டம், இன்னொரு பக்கம் திறமை, மறுபக்கம் வாய்ப்பு என எல்லாம் ஒன்றாக கூடி வரும் போது இது நடக்கும்.
அந்த வகையில் பிரபல எழுத்தாளராக இருந்த வேலராமமூர்த்தி மதயானைக் கூட்டம் படம் மூலமாக குணச்சித்திர நடிகராக மாறினார். அந்த படத்தில் கிடைத்த வரவேற்பால் இப்போது வரை தொடர்ந்து பிசியான குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
இவர் படங்களில் நடித்த காலகட்டத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அப்போது ஆரம்பத்தில் பார்த்த விஜய்சேதுபதிக்கும் அடுத்த படத்தில் பார்த்த விஜய்சேதுபதிக்கும் இன்னொரு படத்தில் பார்த்த விஜய்சேதுபதிக்கும் குணாதிசயங்களில் அவ்வப்போது வித்தியாசங்கள் இருப்பது நன்றாகவே தெரிந்ததாம். ஆரம்பத்தில் தன்னை தேடி வந்து பேசிய விஜய்சேதுபதி அதன் பிறகு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிப் போய்விட்டாராம்.
அதே சமயம் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷின் தந்தையாக நடித்துள்ளார் வேல ராமமூர்த்தி. அந்த படத்தில் நடிக்கும் போது வேல ராமமூர்த்தி நடித்த கிடாரி திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. தனுஷ் அந்த சமயத்தில் மட்டும் படாமலும் இவருடன் பழகி வந்தார். அதே சமயம் கிடாரி படம் அந்த சமயத்தில் வெளியானதும் வேல ராமமூர்த்தியின் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன.
அதைத் தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பிற்கு வந்த வேலராமமூர்த்தியை தனுஷே தேடி வந்து பேச ஆரம்பித்தாராம். ஒரு வெற்றி எப்படியெல்லாம் சிலரிடம் மாற்றத்தை கொண்டு வருகிறது பாருங்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வேல ராமமூர்த்தி.