ஜிவி பிரகாஷ் பாரதிராஜா இவானா தீனா மற்றும் பலர் நடிக்க ஒளிப்பதிவாளர் பிவி ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் கள்வன்
கதை களம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜிவி பிரகாஷ் தீனா அனாதையான இருவரும் வயிற்றுப் பிழைப்புக்காக சிறு சிறு திருட்டுகளை செய்து வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர் அதே சமயம் ஜிவி பிரகாசுக்கு காட்டு அலுவலராக ஆசை அவருக்கு இரண்டு லட்சம் பணம் தேவைப்படுகிறது அதே சமயம் அனாதை ஆசிரமத்தில் இருக்கும் பாரதிராஜாவை தாத்தாவாக தத்து எடுத்து கொள்கிறார் ஜிவி பிரகாஷ் காரணம் பாசத்திற்காக அல்ல யானை மிதிபட்டு செத்தால் 4 லட்சம் பணம் அரசாங்கம் தருவதை கேள்விப்பட்ட பிரகாஷ் தத்தெடுத்த தாத்தாவை காட்டு யானை மூலம் சாகடிக்க முயற்சிக்க அதிலிருந்து பாரதிராஜா தப்பித்தாரா இல்லையா என்பதே மீதி கதை
ஜிவி பிரகாஷ் முகம் முழுக்க தாடி வைத்துக்கொண்டு சிறு சிறு திருட்டுகளை செய்யும் போது ஏனோ நமக்கு பரிதாபம் ஏற்படவில்லை அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை இவானா வீட்டில் அவர் திருட போகும்போது காதல் வலையில் விழுவதும் அவர் பின்பு சுத்துவதும் என வழக்கமான சினிமா பாணியை கடைபிடித்திருக்கிறார் இயக்குனர்
நாயகி இவானா நர்சிங் படிக்கும் மாணவி புத்திசாலி ஆனால் வீட்டில் திருட வந்தவனை போலீசில் பிடித்துக் கொடுத்துவிட்டு அந்த திருடன் தன்னை விரட்டி காதலிக்கும் போது திட்டி விட்டு பிறகு காதல் செய்வது தமிழ் சினிமாவின் நாம் ஆண்டாண்டு காலம் பார்த்து வரும் காட்சிகள் தான் காதலுக்கான அழுத்தமான காட்சிகள் எதையும் இயக்குனர் படத்தில் வைக்கவில்லை
தீனா இவர் தன் பங்கை சிறப்பாக செய்து அவ்வப்போது நம்மை சிரிக்க வைக்கிறார்
இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த கதாபாத்திரத்திற்கு எதற்காக இயக்குனர் தேர்வு செய்தார் என்பது வயது மூப்பின் காரணமாக வா அல்லது மிகப் பெரிய இயக்குனர் தனது படத்தில் நடித்தார் என்பதற்காகவா என்பது இயக்குனருக்கே வெளிச்சம்
பாரதிராஜாவின் காட்சி அமைப்புகள் அனைத்தும் ஒரு சினிமா தனம் அதிலும் ஓர் அழுத்தம் இல்லை அவருக்கு ஒரு பிளாஷ் பேக் அதில் அவர் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் முதலாளி அதனால் கிராமத்திற்கு வரும் சிங்கத்தையே தன் கண்களால் விரட்டி விடுகிறார் காட்சி சிறப்பாக இருந்தாலும் நமக்கு நகைப்பாக இருக்கிறது
ஆனால் இயக்குனர் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை மிக அழகாக படம் பிடித்து நம் கண்களுக்கு விருந்தளிக்கிறார்
கள்வன் –கள்வனின் காதலி