spot_img
HomeNewsஉதவியாளர் செய்த மோசடியால் வெளியே வந்த தேசிங் பெரியசாமியின் பிரச்சனை

உதவியாளர் செய்த மோசடியால் வெளியே வந்த தேசிங் பெரியசாமியின் பிரச்சனை

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. படம் வெளியான சமயத்தில் அவரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு கூட இதுபோல ஒரு கதை சொல்லுங்கள் என்று சொல்லும் அளவிற்கு அந்த படத்தை வெகு நேர்த்தியாக இயக்கி இருந்தார். அடுத்து ரஜினி படத்தை தான் இயக்குவார் என சொல்லப்பட்டது.

ஆனாலும் அவருக்கு பட வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கமல் தயாரிப்பில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் தேசிங் பெரியசாமி. இது ஒரு பக்கம் இருக்க இவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தவர் முகமது இக்பால் என்பவர். இவரிடம் சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் இருந்து நகைகளை கொடுத்து அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து பணம் வாங்கி வரும்படி அனுப்பியுள்ளார் தேசிங் பெரியசாமி.

நகையை மூன்று லட்சத்திற்கு அடமானம் வைத்த அந்த நபர், பணத்தை தேசிங் பெரியசாமியிடம் கொடுக்காமல் கம்பி நீட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து தேசிங் பெரியசாமி அவரை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டபோது அநாகரிக வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம் அந்த நபர்.

இதனால் அதிர்ச்சியான தேசிங் பெரியசாமி தற்போது அண்ணா நகர் காவல் நிலையத்தில் தனது உதவியாளர் மீது புகார் கொடுத்துள்ளார். எப்படியும் கம்பி எண்ணுவோம் என தெரிந்து எதற்காக இந்த வேலையை பண்ணுகிறார்களோ தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img