படப்பிடிப்பு சமயத்தில் அஜித் என்ன செய்வார் என்று பெரும்பாலும் சொல்பவர்கள் ஒன்று அவர் பைக் ரேஸ் போவார் என்பார்கள்.. இன்னொன்று சுவையான பிரியாணி சமைத்துக் கொடுப்பார் என்று சொல்வார்கள்.. பிரிக்க முடியாதது அஜித்தும் பிரியாணியும் என்று சொல்லும் அளவிற்கு அஜித்தின் பிரியாணி திரையுலகில் ரொம்பவே ஃபேமஸ்.
அப்படி ஒரு முறை அஜித் மங்காத்தா படக்குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுத்து இருக்கிறார். அதில் கொஞ்சம் உப்பு குறைவாக இருப்பது அஜித்துக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் மற்ற எல்லோரும் அதை குறை கூறாமல் அஜித்திடம் சூப்பராக இருக்கிறது என்று கூறி சாப்பிட்டுள்ளனர்.
அதன் பிறகு இன்னொரு நாள் அஜித் பிரியாணி சமைக்கலாம் என்று கூறிய போது, அன்னைக்கு மாதிரி சூப்பரா பண்ணுங்க சார்.. அன்னைக்கு கொஞ்சம் உப்பு கம்மியா இருந்துச்சு.. இன்னைக்கு கொஞ்சம் ஜாஸ்தியா போட்டுக்குங்க என்று ஒரு டெக்னீசியன் அஜித்திடம் கூறியுள்ளார்.
ஆனால் அஜித் அது பற்றி கோபப்படாமல் அப்போதே யாராவது சொல்வீர்கள் என நினைத்தேன். இப்போதாவது மனம் விட்டு சொன்னீர்களே என்று அவரை பாராட்டி பின்னர் சுவையான பிரியாணி சமைத்து போட்டாராம். இது குறித்த தகவலை அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.