நடிகர் விமல் நடிப்பில் பல படங்கள் உருவாவதாக அறிவிப்பு வெளியானாலும் கூட எப்படியோ தக்கி முக்கி பிரச்சனைகளை சந்தித்து எப்போதாவது ஒரு படம் தான் அத்தி பூத்தார் போல வெளியாகிறது. ஆனால் அதற்கும் கூட சிக்கல் என்றால் அவர்தான் பாவம் என்ன பண்ணுவார். தற்போது அவர் நடித்து வரும் படம் படம் மா பொ சி. இந்த படத்தின் டைட்டிலால் தான் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த தமிழின காவலர்
மயிலை பொன்னுசாமி சிவஞானம் என்கிற மாமனிதரை எல்லோரும் மா பொ சி என்று தான் அழைப்பார்கள். ஆதலால் தற்போதது விமல் படத்திற்கு இந்த டைட்டிலை வைத்துள்ளது அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இருக்கிறது என்று அவரது பேத்தி
பொன்னரசி என்பவர் இது குறித்து டைட்டிலை நீக்குமாறு புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விமல் மற்றும் இந்த படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட் இருவரிடமும் அவர் பேசியபோது இந்த டைட்டிலுக்கு விளக்கமாக அவர்கள்
மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்பதன் சுருக்கமாக தான் இந்த பெயரை வைத்துள்ளோம்.. மற்றபடி வேறு எந்த உள்நோக்கம் இல்லை என்றும் கூறி உள்ளார்களாம்.
ஆனாலும் மா பொ சியின் பேத்தி இந்த பிரச்சனையை லேசில் விடுவதாக இல்லையாம்.