spot_img
HomeNewsராஜமவுலி இப்படி கூட செய்வாரா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

ராஜமவுலி இப்படி கூட செய்வாரா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இயக்குனர் ராஜமௌலிக்கு நாம் அறிமுகம் கொடுக்க தேவையில்லை. பாகுபலி, ஆர் ஆர் ஆர் என கொஞ்சம் இடைவெளி விட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு படங்களை ரிலீஸ் செய்தாலும் ஒவ்வொன்றையும் பிரமாண்ட வெற்றி படமாக கொடுத்து வருகிறார். அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து அவர் படம் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்வில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் இயக்குனர் ராஜமௌலி. அந்த நிகழ்வின் போது ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் படத்திலிருந்து முக்காலா முக்காபுலா என்கிற பாடல் ஒலிக்கப்பட்டபோது அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து ராஜமௌலி தனது மனைவியுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ராஜமவுலி இப்படி டான்ஸ் எல்லாம் கூட ஆடுவாரா என்று ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img