spot_img
HomeNewsசீமானுக்கு விஜய் ஆதரவு ? ; போஸ்டர் மூலம் சூசகமான அறிவிப்பு

சீமானுக்கு விஜய் ஆதரவு ? ; போஸ்டர் மூலம் சூசகமான அறிவிப்பு

நடிகர் விஜய் தற்போது தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தாலும் அரசியல் ஆசை காரணமாக தனியாக கட்சி ஒன்றை துவங்கி வரும் 2026ல் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துவிட்டார்.

அதற்குள் தற்போது நடித்து வரும் கோட் மற்றும் இன்னொரு படம் என இரண்டையும் முடித்துவிட திட்டமிட்டுள்ளார் விஜய். இந்த நேரத்தில் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தனது மன்ற உறுப்பினர்கள் யாரும் போட்டியிடக் கூடாது என்றும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி யாருக்கும் ஆதரவு கேட்கக்கூடாது என்றும் தெளிவாக கூறிவிட்ட விஜய் தன்னுடைய ஆதரவும் எந்த கட்சிக்கு இல்லை என்று தெரிவித்து விட்டார்.

கிட்டத்தட்ட பத்து சதவீத வாக்குகள் வைத்துள்ள விஜய்யின் ஆதரவு தங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என பல கட்சிகளும் இணைத்தனர். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் கோட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் சம்பந்தமே இல்லாமல் ஒரு மைக் இடம் பெற்றுள்ளது.

இதை பார்த்துவிட்டு நாம் தமிழர் சீமான் கட்சியினர் அனைவரும் உற்சாகமாகிவிட்டனர். காரணம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விவசாயி சின்னம் கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய் தற்போது அவர்களுக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படியோ போராடி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் பட போஸ்டரின் மைக் இடம் பெற்றுள்ளதால் இதை வைத்து விஜய்யின் ஆதரவும் எங்களுக்கு தான், மறைமுகமாக அவர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது போன்று கூறி விஜய் ரசிகர்களை தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் விதமாக திசை திருப்பி வருகின்றனர், இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என தெரியவில்லை, இது உண்மையா என்றும் தெரியவில்லை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img