நடிகர் தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக அந்த படம் பெரிய அளவில் போகாவிட்டாலும் பரவாயில்லை என பாராட்டுகளை பெற்றது. அதன் பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தனுஷ் தற்போது மீண்டும் டைரக்ஷன் இறங்கி ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
ராயன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இன்னும் சொல்லப்போனால் வில்லனாக நடிப்பதற்காக இதுவரை நடித்திராத ஒரு முகம் தேவை என தேடியவர் இசையமைப்பாளர் தேவாவை அந்த கதாபாத்திரத்திற்காக அணுகியுள்ளார்.
ஆனால் இசையமைப்பாளர் தேவா, எனக்கு நடிப்பின் மீது ஆசை இல்லை.. இப்படி இசையிலேயே எனது பயணத்தை தொடர்ந்து விடுகிறேன். தெரியாத வேலையை தொட்டவனும் கெட்டான்.. தெரிந்த வேலையை விட்டவனும் கெட்டான்.. அதனால் என்னை ஆளை விட்டு எங்கப்பா சாமி என்று ஒரு கும்பிடு போட்டு தனுஷை அனுப்பி வைத்து விட்டாராம்.