spot_img
HomeNewsரஜினி குறித்து கிண்டல் சிரிப்பு ; பா ரஞ்சித்தை பொளந்து எடுக்கும் ரஜினி ரசிகர்கள்

ரஜினி குறித்து கிண்டல் சிரிப்பு ; பா ரஞ்சித்தை பொளந்து எடுக்கும் ரஜினி ரசிகர்கள்

அட்டகத்தி படம் மூலம் இயக்குனரான பா ரஞ்சித் அடுத்ததாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். மூன்றாவது படத்திலேயே ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கபாலி படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான காலாவையும் இயக்கும் வாய்ப்பை பா ரஞ்சித்துக்கு கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இப்படி பா ரஞ்சித்துக்கு ஸ்டார் வேல்யூ கிடைக்க காரணமாக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் எப்போதுமே தாழ்வு மனப்பான்மை கொண்ட பா ரஞ்சித் தனது சமூகம் சார்ந்து பேசும்போதெல்லாம் தன்னை பெரிய மேதாவி போல நினைத்துக் கொண்டு பேசுவார். அப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் பேட்டி எடுத்த நெறியாளர், “ரஜினிகாந்த் காலா படத்தில் இந்த சமுதாயம் சார்ந்த விஷயங்களை புரிந்து கொண்டு தான் நடித்தாரா ஒரு கேள்வி எழுப்பினார்.

அதற்கு டீசன்டாக ஆமாம் என்றோ அல்லது இல்லை என்றோ அவர் கூறியிருக்கலாம். அதற்கு பதிலாக ரஜினி அதெல்லாம் புரியாமல் தான் நடித்தார் என்று கூறுவது போல கிண்டலாக சிரித்தபடி தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கிறார் பா ரஞ்சித். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது.

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை இன்னொரு பேட்டியில் கூறும்போது இப்படி அவர் சிரித்ததை எல்லோரும் விமர்சிக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு அதையும் நக்கலாகவே பேசி இருந்தார். ரஜினிகாந்த் போன்ற ஒரே மாபெரும் நடிகர் எந்த ஜாதி, மத பாகுபாடு பார்க்காமல் தான் தன்னுடைய படங்களின் கதாபாத்திரங்களின் நடித்து வருகிறார்.. அப்படித்தான் கபாலி படத்திலும் காலா படத்திலும் பா ரஞ்சித் என்ன சொல்ல நினைத்தாரோ அதை ரஜினிகாந்தின் மூலமாக சொல்ல முடிந்தது.

ரஜினிகாந்த் அதை உள்வாங்காமலயா நடித்திருப்பார் ? அந்த கதை என்னவென்று தெரியாமலேயா ஒப்புக் கொண்டிருப்பார் ? இதை கபாலி, காலா வெளியான சமயத்திலேயே ரஞ்சித் ஏன் சொல்லவில்லை. ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் பா ரஞ்சித்தை இனி நாங்களும் சினிமாவில் இருந்து எட்டி உதைப்போம் என்று ஆவேசமாக கருத்துக்களை ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img