spot_img
HomeNewsவிஜய் சைக்கிளை தூக்கிய விஷால் ; இன்னும் என்னவெல்லாம் கூத்தை பார்க்க வேண்டுமோ ?

விஜய் சைக்கிளை தூக்கிய விஷால் ; இன்னும் என்னவெல்லாம் கூத்தை பார்க்க வேண்டுமோ ?

தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் பலரும் பிரபல ஹீரோக்களை கூர்ந்து கவனித்து வந்தனர். அவர்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்துகிறார்களா என கவனித்தனர். அதேபோல அஜித், விஜய், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.

இதில் கடந்த தேர்தலின் போது நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்றார். இது அந்த சமயத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இது தேவையில்லாத பப்ளிசிட்டி என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து  அரசியல் கட்சியும் தூங்கிவிட்டார் விஜய். 2026 தேர்தலில் போட்டியிடவும் போகிறார்.

தற்போது இதேபோன்ற ஒரு பப்ளிசிட்டியை நடிகர் விஷால் கையில் எடுத்துள்ளார். ஆம்.. இந்த முறை அவரும் வாக்குச்சாவடிக்கு தனி ஒரு ஆளாக சைக்கிளிலேயே வந்து வாக்குச் செலுத்தி சென்றுள்ளார். இதுவும் ஒரு பப்ளிசிட்டி தான்.

அவரும் கட்சி ஆரம்பித்து 2026 தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளதால் விஜய் பாணியில் இந்த சைக்கிளை கையில் எடுத்துள்ளார் என்றே தெரிகிறது. அதே சமயம் விஜய்யின் பின்னால் அவர்கள் ரசிகர்கள் நூற்றுக்கணக்கான பேர் தொடர்ந்து வந்தனர். ஆனால் விஷால் தனி ஆளாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வதை பார்க்க பரிதாபமாகத்தான் இருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img