நடிகர் அஜித் எப்போதுமே தனக்கென ஒரு பிரைவசியை விரும்புபவர். அதனால் தான் தனது படங்களின் ப்ரமோசன் நிகழ்ச்சிகளுக்கு கூட அவர் வருவதில்லை. அது மட்டுமல்ல திரையுலக நிகழ்ச்சிகள், விழாக்கள், சில துக்க நிகழ்வுகளில் கூட அவர் பங்கெடுப்பதில்லை.
கடந்த வருட இறுதியில் கேப்டன் விஜயகாந்த் இறந்தபோது அவர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இப்படி ஒரு மனிதரா என்று பலரும் அவரை விமர்சிக்க துவங்கினார். அதன் பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது நண்பரும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனுமான வெற்றி துரைசாமி என்பவர் விபத்தில் இறந்தபோது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அஜித் தனது குடும்பத்துடன் அவரது வீட்டிற்கு நேரில் சென்றார்.
அப்படி என்றால் அஜித் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தான் இப்படி செய்வாரா என்கிற கேள்வியையும் பலர் எழுப்பினார்கள். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடி 7 மணிக்கு தேர்தல் துவங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே க்யூவில் மூன்றாவது ஆளாக வந்து நின்று விட்டார் அஜித்.
ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்கிறபோது அதை முக்கியமான விஷயமாக கருதி அஜித் முன்கூட்டியே வந்து நிற்கிறார் பாருங்கள், அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி அவர் நடக்கிறார்.. இதில் அவரை விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் பலரும் கூற ஆரம்பித்துள்ளனர்.
இந்த தேர்தலில் இப்படி முன்கூட்டியே வாக்கு செலுத்துவதற்காக வந்து வரிசையில் நின்றதன் மூலம் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக சரிந்த தனது இமேஜை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக அஜித் பயன்படுத்திக் கொண்டார் என்றே தெரிகிறது.