விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது எழுந்துள்ளது. இந்த நிலையில் விஷால் தனது படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டும் அல்லாமல் சினிமா குறித்து சில பொதுவான விஷயங்களையும் கூட பேசுவார்.
அப்படி ஒரு விழாவில் மூன்று கோடி நான்கு கோடி பட்ஜெட்டில் சின்ன படம் எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு யாரும் கொஞ்ச நாளைக்கு தயவு செய்து வர வேண்டாம். இப்போது நிலைமை சரியாக இல்லை என்று கூறினார். அவர் சினிமா பிசினஸ் இப்போது சரியாக இல்லை என்பதால் ஒரு நல்ல எண்ணத்தில் அப்படி எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் பலர் அதை தவறாக புரிந்து கொண்டு சின்ன தயாரிப்பாளர்களை விஷால் ஒதுக்குகிறார் என்பது போல பேச ஆரம்பித்தார்கள். ஒரு வழியாக அந்த பிரச்சினை முடிந்த நிலையில் இந்த ரத்னம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசும்போது சின்ன பட்ஜெட் படங்கள் வரவேண்டும் என்கிற விதமாக பேசினார்.
அப்போது கேள்விகள் கேட்ட பத்திரிகையாளர் ஒருவர், ஒரு நாள் சின்ன பட்ஜெட் படம் எடுப்பவர்கள் வர வேண்டாம் என சொன்னீர்கள்.. இப்போது சின்ன பட்ஜெட்டிற்கு ஆதரவாக பேசுகிறீர்களே என்று கேட்டார். இதனால் கொஞ்சம் ஜெர்க்கான விஷால் உடனே, “தோனி வந்து படம் எடுத்தார். அவரிடம் யாராவது இது பற்றி கேள்வி கேட்டீர்களா? அவர் படம் என்ன கலெக்ஷன் வந்தது என்று கேட்டீர்களா ? என்னை ஏன் கேட்கிறீர்கள் ? அவரை போய் கேளுங்கள்” என்று கேள்விக்கான பதிலை திசை மாற்றினார். நாம் என்ன கேட்டால் இவர் என்ன சொல்கிறார் என்று அந்த பத்திரிக்கையாளரும் அப்படியே குழம்பி போய் உட்கார்ந்து விட்டார்.