spot_img
HomeNewsகொல்றார்யா மனுஷன்.. பிரபல ஹீரோவுக்கு நயன்தாராவின் உச்சபச்ச பாராட்டு

கொல்றார்யா மனுஷன்.. பிரபல ஹீரோவுக்கு நயன்தாராவின் உச்சபச்ச பாராட்டு

 

நடிகை நயன்தாரா பெரிய அளவில் பொதுவெளியிலோ அல்லது சோசியல் மீடியாவிலோ தனது கருத்துக்களை பதிவு செய்வது வழக்கம் இல்லை. ஆனால் திருமணத்திற்கு பின்னரோ என்னவோ அவரிடம் நிறைய மாற்றம் தெரிகிறது. கணவனுடன் சேர்ந்து அடிக்கடி நிறைய இடங்களுக்கு சென்று வருகிறார். தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறார். நல்ல திரைப்படங்களை பார்த்துவிட்டு மனதார பாராட்டுகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த ஹீரோவின் நடிப்பை பிரமித்து போய் பாராட்டியுள்ள நயன்தாரா, மனுஷன் கொல்றார்யா என்கிற ரேஞ்சுக்கு வியந்து போய் உள்ளார். அவர் வேறு யாருமில்லை.. தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் மிகப்பெரிய இடம் பிடித்த மலையாள நடிகர் பகத் பாசில்தான்.

ஏற்கனவே விக்ரம், புஷ்பா, மாமன்னன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. இந்த படத்திற்கு ஏற்கனவே விக்னேஷ் சிவன் தனது பாராட்டை தெரிவிக்கும்போது பகத் பாசிலை வேற்று கிரகத்திலிருந்து வந்த மனிதன் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து சமந்தாவும் பகத் பாசிலை மனதார பாராட்டியிருந்தார். இந்த நிலையில் நயன்தாரா இப்போதுதான் இந்த படத்தை பார்த்திருப்பார் போல தெரிகிறது. உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த படம் குறித்து பல விஷயங்களை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார். அந்த அளவிற்கு இந்த படமும் பகத் பாசில் நடிப்பும் அவரை ஈர்த்துவிட்டது என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img