சுந்தர். சி கிட்டத்தட்ட 30 வருடங்களாக நிற்காமல் ஓடுகின்ற குதிரை. காலத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை அப்டேட் செய்து கொண்டு தனக்கும் ரசிகர்களுக்கும் செட்டான நகைச்சுவை படங்கள் மற்றும் ஹாரர் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெற்றி பாதையில் பயணித்து வருகிறார்.
ஏற்கனவே அவர் எடுத்த அரண்மனை படத்திற்கு மூன்று பாகங்கள் வெளியாகி விட்ட நிலையில் தற்போது நான்காம் பாகம் வரும மே மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார் சுந்தர் சி. அப்போது அவர் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றை கூறினார்.
அதாவது 20 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவரை அழைத்து நாம் ஒரு படம் பண்ணலாம் என்று கூறி நாங்கள் எடுத்த ஹிட் படங்களே எங்களிடம் நிறைய இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றை பாருங்கள்.. அதை வைத்தே புதிதாக உருவாக்கலாம் என கூறி மூன்று படங்களை காட்டினார்களாம்.
அதை பார்த்த சுந்தர் சிக்கு அதிர்ச்சி. காரணம் அவர் இங்கே எடுத்த படங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு அங்கே எடுத்து வைத்திருந்தார்கள். அதன்பிறகு அந்த தயாரிப்பாளர்களுடன் இணைந்து படம் பண்ணாத சுந்தர்.சி தெலுங்கு படம் என்றாலே கோபப்படும் அளவிற்கு வந்து விட்டாராம்.
பதிலுக்கு நாம் அவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சில தெலுங்கு படங்களை பார்த்து அதன்படி உருவாக்கிய கதை தான் பிரசாந்த் நடித்த வின்னர். ஆனாலும் பழிவாங்கும் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததால் பின்னர் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு நேரடியாக பண்ணிவிட்டாராம்.
அதன் பிறகு ஒரு தெலுங்கு படத்தை பார்த்தபோது வின்னர் படத்தில் தான் வடிவேலுக்காக வைத்திருந்த காமெடி காட்சியை அப்படியே கொஞ்சம் கூட மாற்றாமல் அங்கே உள்ள நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் பண்ணி இருந்தாராம். இதனால் நொந்து போன சுந்தர் சி, அப்பா உங்களை மிஞ்ச ஆள் இல்லை.. நான் என்னை உடைய தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. இனிமேல் தெலுங்கு பக்கமே நான் வரமாட்டேன் என்று கூறிவிட்டாராம்.