spot_img
HomeNewsஅஜித்தை தேடிப்போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ; பிரபல இயக்குனர் காட்டம்

அஜித்தை தேடிப்போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ; பிரபல இயக்குனர் காட்டம்

 

அஜித் ஒரு பக்கம் விடாமுயற்சி, இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இப்போதைக்கு இந்த இரண்டு படங்கள்தான் அஜித் கைவசம் இருக்கிறது. அதன் பிறகு அஜித் படங்களை யார் இயக்குவார் என இன்னும் யூகங்கள் கூட செய்ய முடியவில்லை.

அதே சமயம் இதற்கு முன்பு அஜித்தை வைத்து இயக்கிய இயக்குனர்களிடம் யாராவது பேட்டி எடுத்தால் அதுவும் சமீப நாட்களாக அஜித்தின் படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வரும் நிலையில் ஒவ்வொரு இயக்குனரிடமும் தவறாமல் நீங்கள் அஜித் படத்தை இயக்குவீர்களா? என்று கேட்டு வருகிறார்கள்.

ஆனால் இவர்களில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் வித்தியாசமானவர். ஏற்கனவே அஜித்தை வைத்து வில்லன், வரலாறு ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். அவரிடம் அஜித் படத்தை இயக்குகிறீர்களா என்று கேட்டபோது யாரையும் தேடிச்சென்று நான் வாய்ப்பு கேட்க மாட்டேன். யாராவது என்னை தேடி வந்து என் படத்தை இயக்குங்கள் என்று சொன்னால் இயக்குவதற்கு தயங்க மாட்டேன் என்று பொட்டில அடித்தாற் போல பதில் கூறி கேள்வி கேட்டவரின் வாயை அடைத்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img