கமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார். அதுவும் கதாநாயகனாக அல்ல.. பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார்.. இதற்கே அவர் தமிழில் வாங்கும் அளவிற்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்..
புராணத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட போர்சன் இருக்கிறதாம். இதில் கிருஷ்ணர் குறித்து விவரமாக இடம்பெற செய்தால் நன்றாக இருக்கும் என படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் நினைத்தாராம். அந்த சமயத்தில் தான் பிரபல சீனியர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் கிருஷ்ணரை வைத்து ஒரு படம் இயக்கும் விதமாக கதை ஒன்றை தயார் செய்து வைத்திருந்த தகவல் இவரது கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த சிங்கீதம் சீனிவாச ராவ் தான் கமலின் ஆஸ்தானை இயக்குனராக அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். ஆதலால் அவரிடம் சென்று கல்கி படத்திற்காக கிருஷ்ணர் குறித்து தன்னுடைய யோசனையை சொன்னதும் சந்தோஷமாக முன்வந்து தனது படத்திற்காக வைத்திருந்த பல விஷயங்களை இயக்குனரிடம் பகிர்ந்து கொண்டாராம் சங்கீதம் சீனிவாசராவ். இந்தப்படத்தில் கமலும் நடிப்பதால் தனது அபிமான நடிகருக்காக இந்த உதவியை அவர் செய்துள்ளார் என்று தெரிகிறது.