spot_img
HomeNewsவிஜய் மகன் படத்தில் நடிக்க மறுத்த கவின் ; காரணம் இதுதான்

விஜய் மகன் படத்தில் நடிக்க மறுத்த கவின் ; காரணம் இதுதான்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரது தந்தை இயக்குனர் என்றாலும் விஜய் நடிப்புப்பாதையை தேர்ந்தெடுத்தார் இப்போது விஜயின் மகன் ரேஷன் சஞ்சய் தனது தந்தையின் பாதையில் நடிப்பை தேர்ந்தெடுக்காமல் தனது தாத்தாவின் வழியில் டைரக்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார்.

வெளிநாடு சென்று இதற்காக டைரக்சன் படித்துவிட்டு வந்த சஞ்சய், லைக்கா நிறுவனத்தில் படம் இயக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார். இந்த படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார்கள், பிரபல ஹீரோ நடிக்கிறார்களா அல்லது சாதாரண ஹீரோ நடிக்கிறார்களா என பல நாட்களாக பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக டாடா படம் வெளியான பிறகு கவினுக்கு என ஒரு மார்க்கெட் உருவானதால் இந்த படத்தில் கவின் நடிக்கிறார் என்று கூட சொல்லப்பட்டு வந்தது. அப்படி எல்லாம் இருக்காது என்று பலரும் சொன்ன நிலையில், இல்லை.. சஞ்சயை நான் சந்தித்தது உண்மைதான்.. என்னை அவர் படத்தில் நடிக்கும்படி கேட்டார் என்று தற்போது கூறியுள்ளார் கவின்.

ஆனால் டாடா படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நான் ஒப்பந்தம் ஆகிவிட்டதால் சஞ்சய் கேட்ட தேதிகளில் என்னால் நடிக்க இயலாது என்பதை நேரில் சென்று சொல்லிவிட்டு வருவதற்காகவே அவரை சந்திக்க சென்றேன்.. என்னுடைய நிலையையும் அவரிடம் சொன்னேன். அவரும் புரிந்து கொண்டார் என்று கவின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img