கடந்த சில நாட்களாகவே ஒருவரின் இசையை பயன்படுத்துவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது, இதில் காப்பிரைட் சட்டம் யாருக்கு செல்லுபடி ஆகும் என்பது குறித்து காரசார விவாதம் நடந்து வருகிறது.
காரணம் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் வைத்து இயக்க உள்ள கூலி படத்திற்காக இளையராஜா இசையில் வெளியான ரஜினி பாடலுக்கான இசையை கூலி டீசரில் பயன்படுத்தி இருந்தார் இசையமைப்பாளர் அனிருத். இதற்கு இளையராஜா, கூலி பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மீது காபி ரைட்ஸ் சட்டத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதேசமயம் இளையராஜாவுடன் பல வருடங்கள் பணியாற்றி பின் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது வரை பிரிந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து காப்பி ரைட்ஸில் பாடல் ஆசிரியர்களுக்கும் உரிமை உண்டு. பாடல்கள் வரிகள் இல்லாவிட்டால் இசையை வைத்து என்ன செய்வது என்பது போன்று பொதுவெளிகளில் பேசி வருகிறார். இது இவர்களது கருத்து மோதலை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தற்போது ஏ ஆர் ரஹ்மான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து பேசுகின்ற ஒரு பேட்டியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, சில கற்றார் பேச்சும் இனிமையே எனக் கூறியுள்ளார்.
அதாவது நிறைய கற்று விட்டோம் என யாரும் தன்னை தானே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.. சில நூல்களை மட்டுமே கற்றவர் பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதாவது பெரிய சூரியனின் வெயிலில் இருந்து ஒரு சிறிய குடை காப்பது போல அவர்களது செயல் இருக்கிறது என்று விளக்கமும் கூறியுள்ளார்.
திடீரென இவர் இப்படி தமிழ் செய்யுளில் இருந்து விளக்கம் எடுத்து பதிவிட்டதற்கு காரணம் புரியாமல் பல ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஒருவேளை வைரமுத்துவின் சமீப பேச்சுக்களால் கோபமாகி இதுபோன்று அவர் தனது வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. காரணம் கடந்த பல வருடங்களாக வைரமுத்துவும் ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்து பணியாற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.