விஜய், அஜித் இருவரும் சரிசமமான முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் கதை கேட்கும் பாணி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானது. அஜித்திற்கு ஒரு அவுட்லைன் சொன்னாலே பிடித்து விடும். இதை வைத்து டெவலப் பண்ணுங்கள் என்று கூறிவிடுவார்/
ஆனால் விஜய்க்கு மொத்த கதையையும் தயார் செய்து அதை நான்கு மணி நேரம் சொன்னால் கூட பொறுமையாக கேட்பார். அப்படி கதை கேட்டு பிடித்து ஓகே சொன்னால்தான் அதன் பிறகு அந்த படம் உறுதி என அர்த்தம்.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்சியல் இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரையும் இயக்கியுள்ளார். ஆனால் விஜய் படத்தை மட்டும் இயக்கவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சில முறை வந்து ஒவ்வொரு காரணங்களால் தள்ளிப் போனது என்று கூறியுள்ளார் சுந்தர் சி.
ஒரு முறை விஜய்க்காக ஒரு கதையின் அவுட் லைன் மட்டும் தயார் செய்து அவரிடம் சென்று கூறியுள்ளார் சுந்தர். சி அவருக்கு முழுதாக கதை கூற வராது.. ஆனால் படமாக அருமையாக எடுத்து விடுவார். அதேசமயம் விஜய் முழு கதையையும் கேட்பார்.
அப்படி ஒரு முறை கதையும் சொல்லி இடைவேளை வரை விஜய்க்கு பிடித்து விட்டது. இடைவேளைக்குப் பிறகு விஜய்க்கு பிடிக்கவில்லை. அதே சமயம் ஒரு முறை டப்பிங் ஸ்டுடியோவில் எதிர்பாராத விதமாக அஜித்தே சுந்தர்.சியை தேடி வந்தார். உங்கள் டைரக்ஷனில் நடிக்கிறேன் என்றார். கதை என்று சுந்தர் சி கேட்டதும் அதெல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்று கூறிவிட்டாராம் அஜித்.
நம்மை சந்தேகப்பட்டு ஒதுங்கும் ஹீரோவை விட நம்மை நம்பி தன்னை ஒப்படைக்கும் ஹீரோவை வைத்து படம் பண்ணலாமே என நினைத்து அஜித்தை வைத்து உன்னைத்தேடி என்கிற படத்தை இயக்க சென்று விட்டாராம் சுந்தர் சி. அதன் பிறகு விஜய் படத்தை இயக்க முடியாமலேயே போய்விட்டது.