spot_img
HomeNewsமறைந்திருந்து தாக்கிய தனுஷ் பட நாயகி.

மறைந்திருந்து தாக்கிய தனுஷ் பட நாயகி.

 

மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் அனேகன். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் நடித்திருந்தார். அந்த படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் அதன் பிறகு தமிழில் நடிக்காமல் ஒதுங்கிக் கொண்டு பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பொதுவாக எல்லா கதாநாயகிகளும் சோசியல் மீடியாவில் சந்திக்கும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் இவரும் சந்தித்தார். ஆனால் மற்றவர்களைப் போல கண்டும் காணாமலோ அல்லது பதில் சொல்லாமல் நமக்கு எதற்கு வம்பு என்றோ ஒதுங்கிப் போக இவரால் முடியவில்லை..

அதே சமயம் தனது பதிவுகளின் கீழ் தன்னை பற்றி மோசமாக கருத்து பதிவிடுபவர்களிடம் குழாயடி சண்டை போல சண்டை போடவும் இவருக்கு பிரியமில்லை. அதனால் என்ன செய்தார் தெரியுமா ? போலியாக இரண்டு மூன்று சோசியல் கணக்குகளை துவங்கிய இவர் அந்த கணக்கில் இருந்து தன்னை யாரெல்லாம் கடுமையாக முறையற்ற வகையில் விமர்சிக்கிறார்களோ அதே பாணியில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினார்.

இப்படி விமர்சன கருத்து பதிவிட்ட பலரும் யாரடா இது சம்பந்தமில்லாமல் நமக்கு பதிலடி கொடுக்கிறார்கள் என்று நிச்சயம் குழம்பி இருப்பார்கள். ஆனால் சமீபத்தில் தான், இப்படி ஒரு வேலையை செய்து வருவதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் அனேகன் பட நாயகி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img