spot_img
HomeNewsமகள் படத்தில் நடிப்பதற்கு நண்பரின் மகளிடம் அனுமதி கேட்ட ரஜினிகாந்த் ; எதற்காக தெரியுமா ?

மகள் படத்தில் நடிப்பதற்கு நண்பரின் மகளிடம் அனுமதி கேட்ட ரஜினிகாந்த் ; எதற்காக தெரியுமா ?

ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நடித்திருந்தாலும் கொஞ்ச நேரமே வந்து செல்லும் கெஸ்ட் ரோலில் தான் நடித்துள்ளார். படத்தில் கதாநாயகர்களாக நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

கிரிக்கெட்டை மையப்படுத்திய கதை என்பதால் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்கனவே ஆர்வமுள்ள இந்த இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. ஆனால் இந்த படத்தில் தனது தந்தையை நடிக்க அழைத்த போது ரஜினிகாந்த் சற்றே தயங்கி இருக்கிறார்.

காரணம் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் நட்ராஜின் மகள் ரஜினி என்பவரை தான் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் எட்டு வருட வாழ்க்கைக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தனர்.

அப்படி தனது நண்பரின் மகளைப் பிரிந்த ஒரு நடிகரின் படத்தின் நடிக்க வேண்டுமா என்கிற தயக்கம் ரஜினிக்கு இருந்தது. இருந்தாலும் தனது நண்பரின் மகளிடமே போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார் ரஜினி. அதற்கு நண்பரின் மகளான ரஜினியும் தாராளமாக நீங்கள் நடியுங்கள் அங்கிள் என்று கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

தனது முன்னாள் மனைவி பற்றி எங்கேயும் ஒரு வார்த்தை கூட பேசாத நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தி ரஜினிகாந்தின் பெருந்தன்மை பற்றி சொல்லவேண்டும் என்பதற்காக இந்த தகவலை கூறியுள்ளார்.

Must Read

spot_img