spot_img
HomeNewsலவ்வர் விமர்சனம்

லவ்வர் விமர்சனம்

மணிகண்டன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்திருக்கும் படம் லவ்வர்

கதைக் களம் காதலுக்குள் ஏற்படும் இன்பம் துன்பம் பிரிவு பொசசிவ்னஸவை அனைத்தையும் நாம் அனுபவிக்கும் விதத்தில் வந்திருக்கும் படம் லவ்வர்

நாயகி கௌரி பிரியா ரெட்டி நாயகன் மணிகண்டனை கல்லூரி காலம் முதல் காதலித்து ஒரு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருக்க

நாயகி ஒரு ஐடி கம்பெனிக்கு வேலை செய்ய

நாயகன் ஒரு கஃபே ஆரம்பிக்கும் முயற்சியில் ஸ்பான்சர் க்காக அலைந்து கொண்டிருக்க

நாயகி ஆபீஸ் பார்ட்டி என நண்பர்களுடன் தன் நேரத்தை செலவிட அதை தன்னிடம் ஏன் சொல்லாமல் சென்றாய் என நாயகன் சண்டையை ஆரம்பிக்க மோதல் காதல் ஊடல் என காட்சிகள் இருந்தாலும் நாயகன் மணிகண்டனுக்கு தன் காதலி மீது அளவு கடந்த பாசத்தை வைத்ததினால் அடிக்கடி சண்டை ஏற்பட ஒரு கட்டத்தில் காதலை பிரேக் அப் செய்ய நாயகி கவுரி முடிவெடுத்து விடுகிறார் தன் காதலை ஏற்க சொல்லி மணிகண்டன் மன்றாட நாயகி காதலை மீண்டும் ஏற்றுக் கொண்டாளா இல்லையா என்பதை லவ்வர் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

நாயகன் மணிகண்டனுக்கு குட் நைட் பிறகு மற்றும் ஒரு வெற்றியை சுவைக்க வந்திருக்கும் படம் தான் லவ்வர்

படம் முழுக்க சிகரெட் குடி இதுதான் இவர் கதாபாத்திரத்தின் தன்மை என இயக்குனர் வடிவமைத்திருக்கிறார்

தன் காதலியிடம் சண்டை போடும் காட்சிகள் பொசசிவ்னஸ் உள்ள காதலன் அனைவருக்கும் இவரின் ஆதங்கம் கண்டிப்பாக புரியு

இவரின் இயலாமை அந்த இயலாமையின் வெளிப்பாடு கோபம் கோபத்தின் வெளிப்பாடு சண்டை சண்டையின் பிற்பாடு மன்னிப்பு என ஒரு எதார்த்த காதலனுக்குரிய அனைத்து பண்புகளையும் மணிகண்டன் தன் உள் உள்வாங்கி நம்மிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் இவரின் வசன உச்சரிப்பும் உடல் மொழியும் நம்மை ரசிக்க வைக்கிறது நடிப்பில் இளம் புயலாய் கிளம்பி பெரும் புயலாய் மக்களை மகிழ்விப்பார் என்பதில் நமக்கு ஐயமில்லை

நாயகி கௌரி பிரியா ரெட்டி சரியான தேர்வு இவரின் பல வசனங்கள் கண்களே பேசுகின்றன காதலன் சண்டை போடும்போது வரும் கோபமும் பிறகு மன்னிப்பு கேட்கும் போது அதை மன்னிக்கும் விதமும் இவரின் கண்களே கதை சொல்கின்றன

லிவிங் டு கெதர் இல் இருந்தாலும் எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல் பார்க்கும் ரசிகன் முகம் சுளிக்காமல் தன் நடிப்பின் மூலம் நம் மனதை ஆக்கிரமித்து விடுகிறார் காதலை பிரேக் அப் செய்தாலும்

தன் காதல் மீது உள்ள காதலை நாயகன் நாயகி இடம் ஞாபகப்படுத்தினாலும் அதை நாயகி மறுக்கும் விதம் ஒரு சிறந்த நடிகைக்கான எல்லா அம்சங்களும் அவரிடம் இருப்பது வருங்காலத்தில் முன்னணி நாயகி வரிசையில் இடம் பிடிப்பார் என்பது வருங்காலம் பதில் சொல்லும்

மணிகண்டனின் அம்மாவாக கீதா கைலாசம் அப்பாவாக சித்தப்பு சரவணன் ஏனோ இந்த இரண்டு கதாபாத்திரங்களும் நம்மை ஈர்க்கவில்லை

நாயகியின் ஆபீஸ் நண்பர்களாக வரும் நால்வரின் நடிப்பு சிறப்பு சிரிப்பு

இயக்குனர் பிரபு ராம் வியாஸ் திரைக்கதையை தொய்வில்லாமல் பார்க்கும் ரசிகன் ரசிக்கும் வண்ணம் மிக அருமையாக காதலை அலசி ஆராய்ந்து காட்சிகளையும் வசனங்களையும் வடிவமைத்திருக்கிறார் நாம் எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சி மிகச் சிறப்பு

லவ்வர் இவன்— சாதிக்க பிறந்தவன்

Must Read

spot_img