நடிகராகவும் இசையமைப்பாளராகவும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார் நடிகர் ஜிவி பிரகாஷ். ஒரு பக்கம் பிசியான நடிகராக இருந்தாலும் கூட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக வெற்றிகரமான ஹிட் பாடல்களை கொடுத்து வருவதுடன் தன்னுடைய படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் ஜி வி பிரகாஷ்.
ஆனாலும் சில காரணங்களால் அவரது படங்கள் வெளியாவதற்கு தாமதம் ஆகி வருகிறது. அந்த வகையில் கள்வன், ரிபெல், டியர் உள்ளிட்ட ஜிவி பிரகாஷின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றது.
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் பேசும்போது இவ்வளவு பிரபலமாக இருக்கிறீர்களே விளம்பர படங்களில் ஏன் நடிப்பதில்லை என்று கேட்டபோது, “விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை.. அதே சமயம் ரம்மி சூதாட்டம் போன்ற விளம்பர படங்களில் எவ்வளவு கோடி கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்” என்று ஒரு போடு போட்டார்.
கடந்த சில வருடங்களாக ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்து வரும் சரத்குமார் அது பற்றிய பொறுப்புணர்வு கொஞ்சமும் இன்றி பணத்திற்காக நடித்து வருவதுடன் விளக்கம் கேட்டால், தன தவறை மறைக்கும் விதமாக வியாக்கியானம் பேசி அதை நியாயப்படுத்தி வருகிறார். அவருக்கு ஒரு சாட்டையடி கொடுப்பது போலத்தான் ஜிவி பிரகாஷின் பதில் அமைந்துள்ளது.