மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சிம்பு படங்களுக்கு என மீண்டும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து விட்டது. அந்த வகையில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வெளியானாலும் மாநாடு படம் போல மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது தேசிய பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார் சிலம்பரசன்.
இந்த படத்திற்காக இவர் இதுவரை ஏற்று நடித்திராத கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் சிம்பு.
இதற்கு முன்னதாக அப்பு என்கிற படத்தில் பிரகாஷ்ராஜும் ஆதி பகவன் என்கிற படத்தில் ஜெயம் ரவியும் இது போன்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஒருவேளை சிம்புவும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தால் இவர்களுக்கு அடுத்தபடியாக அந்த கதாபாத்திரத்தில் நடித்த பெருமையை பெற்றுக்கொள்வார்.
அதே சமயம் வேறு சிலர் இந்த கதாபாத்திரம் பற்றி கூறும்போது, இது திருநங்கை கதாபாத்திரம் அல்ல என்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனக் கலைகளை கற்றவர்களுக்கு உண்டான பெண் நளினத்தன்மை கொண்ட ஒரு ஆண் கதாபாத்திரம் குறிப்பாக சொல்லப்போனால் வரலாறு படத்தில் அஜித் நடித்தது போன்று, விஸ்வரூபம் படத்தில் ஆரம்ப கமலஹாசன் ஏற்று நடித்த கதாபாத்திரம் போன்று ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.