spot_img
HomeNewsமணிரத்னம் அண்ணன் தற்கொலைக்கு மைக்கேல் ஜாக்சனும் ஒரு காரணம் ; வெளியான அதிர்ச்சி தகவல்

மணிரத்னம் அண்ணன் தற்கொலைக்கு மைக்கேல் ஜாக்சனும் ஒரு காரணம் ; வெளியான அதிர்ச்சி தகவல்

திரையுலகில் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் என்றால் அவர்கள் ஒன்று நடிகைகளாக இருக்கிறார்கள்.. இல்லை என்றால் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள்.. இந்த இரு பிரிவை தவிர வேறு ஹீரோக்களும் இயக்குனர்களும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் ரொம்பவே அரிதானது தான்.

அப்படி தற்கொலை செய்து கொண்ட ஒரு தயாரிப்பாளரின் மரணம் சினிமாவை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றால் அது பிரபல தயாரிப்பாளர் ஜிவி என அழைக்கப்படும் ஜி..வெங்கடேஸ்வரனின் தற்கொலை மரணம் தான். காரணம் இவர் பிரபல தயாரிப்பாளர் மட்டுமல்ல இயக்குனர் மணிரத்தினத்தின் சகோதரரும் கூட.

தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வந்த இவர் தனது இறுதி காலத்தில் விஜய் நடித்த தமிழன், விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் ஆகிய படங்களை தயாரித்தார். இந்த படங்கள் ஏற்படுத்திய நட்டங்களால் தான் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் இவருடன் நெருங்கி பழகிய பிரபலமான முக்தா ஃபிலிம்ஸ் உரிமையாளர்களின் வாரிசுமான முத்தா ரவி என்பவர் இதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழன், சொக்கத்தங்கம் படங்கள் கூட ஓரளவுக்கு அவருக்கு லாபகரமான படங்களாக தான் அமைந்தன, ஆனால் அவர் சில வருடங்களுக்கு முன்பே மக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்களையும் பங்குதாரர்களாக மாற்றி படம் தயாரிக்கும் விதமாக தனது நிறுவனத்தை பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றி இருந்தார், இதன் மூலம் பலரும் தங்களது பணத்தை முதலீடு செய்தார்கள்,

ஆனால் படம் தயாரித்த வகையில் நிறைய பேர் ஜிவிக்கு பணம் தராமல் கைவிட்டு விட்டார்கள்.அதுமட்டுமல்ல பிரபல பின்னணி பாடகரும் நடன கலைஞருமான மைக்கேல் ஜாக்சனை சென்னைக்கு வரவழைத்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக மிகப் பெரிய அளவில் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வந்தார் ஜி.வெங்கடேஸ்வரன். ஆனால் கடைசி நேரத்தில் மைக்கேல் ஜாக்சன் வராமல் ஏமாற்றியதால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்தார் ஜி வெங்கடேஸ்வரன் இதனால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளான ஜிவி ஒரு கட்டத்தில் இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தற்கொலை முடிவு எடுத்துக் கொண்டார் என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார் முக்தார ரவி.

Must Read

spot_img