சினிமாவைப் பொறுத்தவரை கதாசிரியர்கள் என்பவர்கள் எப்போதுமே நிதானம் தவறாதவர்களாக, தங்களது வேலையை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுவர்களாக இருந்து வருவார்கள். அதே சமயம் எழுத்தாளர்களாக இருந்து சினிமாவிற்கு நுழைந்து கதாசிரியர்களாக மாறும் சிலருக்கு தாங்கள் எழுத்தாளர் என்கிற தலைக்கனம் எப்போதுமே இருந்து கொண்டு இருக்கும். அதனால் அவர்களது பேச்சும் பல நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திவிடும்.
அப்படி பிரபல எழுத்தாளரும் ஷங்கர், மணிரத்னம், பாலா போன்றவர்களின் படங்களில் கதாசிரியராக பணியாற்றி வருபவருமான ஜெயமோகன், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் குறித்து பொறுக்கிகள் என கூறி தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
மலையாளத்தில் வெற்றி பெற்று தமிழிலும் அதே அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்றால் தமிழ் ரசிகர்கள் எந்த அளவிற்கு ரசனை உள்ளவர்களாக இருப்பார்கள்.. அப்படிப்பட்ட தமிழ் ரசிகர்களின் ரசனையை கொச்சைப்படுத்தும் விதமாக இவர் பேசிய பேச்சு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைவரும் சோசியல் மீடியாவில் ஜெயமோகனை வைத்து செய்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மாவு வாங்கிய போது புளித்து விட்டது என்று கூறி அவனுடன் சண்டைக்கு சென்று மோசமாக அடி வாங்கி கட்டுப்போட்டு திரிந்தவர்தான் இந்த ஜெயமோகன்.
இவர் எழுதும் கதைகள், இவர் பணியாற்றும் படங்கள் பெரிய அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. அதே சமயம் புதிதாக வரும் இளைஞர்கள், இந்த அளவிற்கு ரசிகர்களை கவரும் விதமாக படம் தருகிறார்கள் என்கிற பொறாமை உணர்ச்சி காரணமாகவே அவர் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது.