சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் இயக்குனர் மிஷ்கினை இன்னொரு ராதாரவி என்று சொன்னால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் உணர்ச்சிவசப்பட்டால் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் பரபரப்பிற்காக ஏதோ ஒன்றை பேசி விடுவார்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்காது. ஆனால் யாரையோ மனதை நோக வைத்து சங்கடப்படுத்திவிடும் இவர்களது வார்த்தைகள்.
மிஸ்கின் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு இருப்பதாலோ என்னவோ அவரால் மற்றவர்களின் மனதை நோகடிக்காமல் பேச முடியவில்லை போலும். சமீபத்தில் தி புரூப் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார் மிஷ்கின்.
அந்த நிகழ்வில் அவர் பேசும்போது எல்லோரும் தவறாமல் சினிமா தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள். ஒரு குடும்பம் மாதத்திற்கு ஒரு முறையாவது தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும். இல்லை என்றால் அது குடும்பமே அல்ல. கோவிலுக்கு கூட செல்ல வேண்டாம்… சினிமாவிற்கு செல்லுங்கள்… கோவிலுக்கு யார் செல்வார்கள் ? பாவம் பண்ணியவன்,, அடுத்து ஏதாவது பாவம் செய்யப் போகிறவன் முன்கூட்டியே கடவுளிடம் சென்று இப்படி நான் செய்யப் போகிறேன் என்று பாவ மன்னிப்பு கேட்பதற்காக தான் செல்கிறார்கள்” என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.