spot_img
HomeNewsமுக்கிய அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் விஷால் ?

முக்கிய அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் விஷால் ?

 

நடிகர் விஷால் சினிமா சம்பந்தப்பட்ட பிரஸ் மீட்டுகளில் கூட அரசியல் பேசுவார். திடீரென அரசியலுக்கு வரப்போகிறேன், அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்றெல்லாம் கூட சமீபத்தில் கூறினார். அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது காலம்தான் தீர்மானிக்கும் என நாம் சொல்லலாம்.

அதே சமயம் அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஷால். அது மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பிரபல இளம் அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகும் கதையில் தான் அவர் நடிக்க இருக்கிறாராம்.

இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் போலீசாக இருந்து அரசியலுக்கு வந்த ஒரு அரசியல் தலைவரின் கதை என்று சொன்னால் உங்களுக்கு எளிதாக புரிந்துவிடும். அப்படியா ? அந்த அரசியல்வாதியாக நடிக்க இருக்கிறாரா ? என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டாம். அது குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதிரடி ஆக்சன் மற்றும் அரசியல் திரில்லராக இந்த படம் உருவாகும் என்று சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img