spot_img
HomeNewsவிஜய் படத்தை வேண்டாம் என புறக்கணித்த இளம் நடிகை

விஜய் படத்தை வேண்டாம் என புறக்கணித்த இளம் நடிகை

 

விஜய் அரசியலுக்கு வரப்போவதாக கூறி தனது அரசியல் கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டதால் அவர் இனி தற்போது நடித்து வரும் கோட் படத்திலும் அடுத்ததாக ஒரு படத்திலும் மட்டுமே நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அவரது கடைசி படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

அதே சமயம் தற்போது கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு இந்த படத்தில் புதிது புதிதாக சில நடிகர்களை சேர்த்து படத்திற்கு வெயிட் ஏற்றி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் சமீப வருடங்களாக புகழின் ஏணியில் ஏறிக்கொண்டிருக்கும் இளம் நடிகை ஸ்ரீ லீலாவை கோட் படத்திற்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார் வெங்கட் பிரபு.

ஆனால் அதற்கு அந்த நடிகை நோ சொல்லிவிட்டாராம். விஜய் படத்திற்கு எப்படி அவர் மறுப்பு சொன்னார் என ஆச்சரியப்பட வேண்டாம். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆறுவதற்காக தான் அவரை அழைத்தாராம் வெங்கட் பிரபு. தமிழில் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்த ஒரு இளம் நடிகைக்கு இப்படி ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுகிறாயா என்றால் கோபம் வரத்தானே செய்யும். அதெல்லாம் முடியாது நான் தமிழில் ஹீரோயினாக தான் அறிமுகமாகவே என்று பிடிவாதமாக கூறி வெங்கட் பிரபு திருப்பி அனுப்பி விட்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img