காளி வெங்கட் மாஸ்டர் சந்தோஷ் தக்ஷனா மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் குரங் பெடல்
கதை க்களம் வாழ்க்கை முழுவதும் நடராஜாவாக நடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காளி வெங்கட்டின் மகன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்வது தான் கதை
படத்தின் நாயகன் சிறுவன் சந்தோஷ் மற்றும் சைக்கிள்
ஆம் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் சைக்கிள் கற்றுக்கொள்ளும் விஷயத்தை இயக்குனர் கமலக்கண்ணன் படம் பார்க்கும் நம்மை ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனாக மாற்றிவிட்டார்
மாஸ்டர் சந்தோஷ் சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது நடைபெறும் விஷயங்கள் எண்பதுகளில் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒரு சம்பந்தம் இருக்கும் அந்த வகையில் திரைக்கதை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்
சைக்கிள் கற்று கொள்ளும்போது முதலில் குரங்கு பெடல் அடித்து தான் ஆரம்பிப்போம் அந்தக் குரங்கு பெடல் லை மாஸ்டர் சந்தோஷ் அடிக்கும் போது ஏதோ நாம் முதன் முதலில் சைக்கிள் கற்றுக் கொண்ட நினைவலைகளை ஆர்ப்பரிக்க வைக்கிறார் இயக்குனர்
வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு மாஸ்டர் சந்தோஷ் நேரமாகி விட்ட காரணத்தினால் காசு பத்தாமல் அதற்காக அவன் படும் பாடு கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கையை வேந்தன் மனநிலையை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறான் மாஸ்டர் சந்தோஷ்
பணத்திற்காக மாஸ்டர் சந்தோஷ் தன் சகோதரி வீட்டுக்கு அடிபட்ட காலோடு சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்லும் வரை இருந்த திரைக்கதையின் விறுவிறுப்பு பிறகு தொங்கி விடுகிறது
அதற்கு மேல் கதையை நகர்த்த இயக்குனர் படாத பாடுபட்டு ஒரு வழியாக படத்தை சுபமாக நிவர்த்தி செய்கிறார்
குரங்கு பெடல் இது ஒரு சைக்கிளின் கதை