தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குனர்களே ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட அனைவரையும் வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றவர்கள். அதில் கே எஸ் ரவிக்குமாருக்கு அடுத்ததாக சுந்தர்.சி தான் இப்படி முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
அந்த வகையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அஜித்தை ஹீரோவாக வைத்து உன்னை தேடி என்ற படத்தை இயக்கினார் சுந்தர் சி. இந்த படத்தின் கதை முதலில் விஜய்க்காக எழுதப்பட்டது. ஆனால் அதன் பின் சில காரணங்களால் இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக உள்ளே வந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் தான் அஜித் பைக் மற்றும் கார் ரேஸுகளில் கலந்து கொண்டு அடிக்கடி விபத்தில் சிக்கி அதனால் முதுகு தண்டுவட பாதிப்புக்கு ஆளாகி இருந்தார். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் அவர் இருந்தார்.
இந்த படத்தில் நடித்த அந்த சமயத்தில் அவருக்கு கால்களில் உணர்ச்சியே இல்லாத ஒரு வித்தியாசமான சூழல் இருந்தது. அதாவது ஜில் என்ற தண்ணீரில் கால் வைத்ததும் அனைவரும் பதறி அடித்து வேகமாக அந்த தண்ணீரை விட்டு வெளியேறுவார்கள். அப்படி தண்ணீர் ஜில்லிட்டதற்காக வித்தியாச முகபாவம் காட்டுவார்கள்.
ஆனால் நடிகர் அஜித் அப்படி சாலக்குடி பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது ஜில் என்ற தண்ணீரில் கால் வைத்து நடந்த போது எந்தவித மாறுபாடும் காட்டாமல் அசால்டாக நடந்து வந்துள்ளார். உடனே சுந்தர் சி அவரிடம் சார் நீங்கள் என்னதான் ஹீரோ என்றாலும் இவ்வளவு ஜில்லென்று இருக்கும் தண்ணீரில் கூட ஒன்றுமே தெரியாதது போல கெத்தாக இருக்கிறீர்களே என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த அஜித் அட போங்க சார், எனக்கு காலில் எது பட்டாலும் அந்த உணர்ச்சி தெரிவதில்லை என்று கூறியுள்ளார். அதாவது மற்றவர்களெல்லாம் ஒரு அடி எடுத்து வைத்ததும் அடுத்த அடியை அனிச்சை செயலாக எடுத்து வைப்பார்கள் அல்லவா ? ஆனால் அஜித் மட்டும் கீழே பார்த்து தான் நடப்பாராம். ஒரு காலில் அடி எடுத்து வைத்ததும் அதற்கு அடுத்து கீழே பார்த்து அடுத்த காலை தூக்கி எடுத்து வைப்பாராம்.
காலில் இருக்கும் உணர்வுகள் மூளைக்கு சென்று அடுத்த கட்டளை இடுவது. அவருக்கு முதுகுத்தண்டுவரை பாதிப்பு ஏற்பட்டதால் செயல்படாமல் இருந்ததாக தெரிகிறது. அதில் எல்லாம் இருந்து மீண்டு வந்து தான் தற்போது பட்டையை கிளப்பி வருகிறார் அஜித்..