தவம் விமர்சனம்

1710
           காதலை விவசாயம் செய்து வெளிவந்திருக்கும் படம்  தவம்
தனது முதலாளியின் வீட்டு திருமணத்திற்குகிராமத்திற்கு செல்லும் நாயகி அங்கு நாயகனே சந்திக்கிறார்
          அந்த நாயகன் தான் தனது சிறு வயது தோழன் என்று நாயகனுக்கு  சொல்ல நாயகனும் காதல் வயப்படுகிறார் இந்நிலையில் அந்த ஊரில் சமூக விரோத செயல்களை செய்து வரும் வில்லனைப் பார்த்து கிராமமே பயன்படுகிறது
ஒரு கொலை கேசில் நாயகி அவனை போலீசில் சிக்க வைக்கிறார் கோபம் கொண்ட நாயகன் அவளை கொலை செய்ய முற்படுகிறான் நாயகி நாயகன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே மீதிக்கதை
          இதன் கிளைக் கதையில் சீமான் வருகிறார் அவர் விவசாயப் போராளி அன்னிய நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கிராமத்தில் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கமுயற்சிக்க அதைத் தடுக்கும் முயற்சியில் உயிரை விடுகிறார் சீமான்
வசி அறிமுக நாயகன்   . நடிப்பில் அறிமுகம் என்பது தெரியவில்லை. கிராமத்து கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகிறார். பூஜாஸ்ரீ சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் இன்னொரு கதாநாயகனே சீமான் தான். இடைவேளையில் இவருக்கு தரப்படும் பில்டப்புகளுக்கு தனது கம்பீரமான நடிப்பால் நியாயம் சேர்க்கிறார். விவசாயத்தின்  பற்றி சீமான் பேசும் வசனங்கள்  சமூகத்துக்கு அவசியமான பாடங்கள். சீமான் வரும் காட்சிகள் படத்தை வலுவாக்குகின்றன.
அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் படத்தை கலகலப்பாக நகர்த்தமுயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறார்கள்
முதல் பாதி காதலுக்கு என்று  ஒதுக்கிய இயக்குனர் காட்சிகளை நகர்த்த மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் கொட்டம் தாங்க முடியலடா சாமி காமெடிக்கு இசை என்ற பெயரில் ஒரு இரைச்சல் படத்தின் இரண்டாம் பாதியில் விவசாயத்தைப் பற்றி காட்சிகள் படத்தை கொஞ்சம் பார்க்கும்படி செய்திருக்கிறார் இயக்குனர்
படத்திற்கு இரண்டு இயக்குனர்கள் இருவரும்  நடித்திருக்கிறார்கள் ஒருவரை வில்லன் ஒருவர் காமெடி படத்தின் முற்பாதியில் காட்சிகளை சரியாக அமைத்திருந்தால் தவம் தமிழகம் முழுவதும் பேசப்பட்டிருக்கும்

தவம்–விவசாய புரட்சி   -காதல் வரட்சி
————————————————-
ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் வழங்கும்  “ தவம் “

சீமான் ( நடேசன் வாத்தியார்  ),  வசி (முருகன் ),  பூஜாஸ்ரீ (அகிலா ),இயக்குனர் விஜய் ஆனந்த ( சிவன்னன் ) இயக்குனர் சூரியன் ( மாமா புலிகேசி ),  அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட் ( வேதகிரி ), சந்தானபாரதி, பிளாக்பாண்டி ( ஐயப்பன் ), கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு   –              வேல்முருகன்

இசை                –              ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள்      –              இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த்

கலை                –               ராஜு

எடிட்டிங்         –              எஸ்.பி.அகமது

நடனம்             –              ரவிதேவ்

ஸ்டண்ட்      –               ஆக்ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை  – குமரவேல்,சரவணன்

தயாரிப்பு  – வசி ஆஸிப்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ஆர்.விஜயானந்த் –  ஏ.ஆர்.சூரியன்

பாடல்கள்

  1. காதலில் விழுந்தேன்       –    ஸ்ரீகாந்த் தேவா ( பாடியவர்கள் – ஸ்ரீகாந்த் தேவா – சீனி )
  2. என்ன என்ன  அழகு           –   கருங்குயில் ஜேம்ஸ் ( பாடியவர் கருங்குயில் ஜேம்ஸ் )
  3. வா நீ கொண்டாடு               –   எழில் வேந்தன், கோவிந்த்
  4. சண்டியரே சண்டியரே     –   மைத்திலி