காட்டுக்குள் இருக்கும் பழங்குடியினரை அங்கிருந்து காலி செய்ய நினைக்கிறது காப்பரேட் நிறுவனம் நடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். . இந்த தீ இயற்கையாக வந்தது இல்லை, செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அறிந்த கஸ்தூரி, அதற்கான ஆவணங்களை தயார் செய்து ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமியிடம் அதை வெளிக்கொண்டு வர, நினைக்கிறார். கஸ்தூரி, திடீரென கொல்லப்பட, மதுரையில் இருந்து சென்னை வருகிறார் வரலட்சுமி. தோழியின் வில்லாவில் தங்கிக் கொண்டு கஸ்தூரி சொன்ன அந்த டாக்குமென்ட்டை தேடுகிறார்.
வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறார். மெதுவாக தொடங்கும் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இறுதியில் ஒரு இடத்தில் கச்சிதமாக நிற்கிறது.ஒரு வீட்டிற்குள் அனைத்து கதாபாத்திரங்களையும் ஒருங்கிணைத்து படத்தில் 75% அந்த வீட்டிற்குள்ளேயே எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர்ஆனால் காட்சிக்கு காட்சி நம்மை சீட்டின் முனைக்கு கொண்டுசொல்லுகிறார்இவருக்கு பதில் இவர் என்பதை நாம்தொலைக்காட்சி தொடரில் பார்த்திருக்கிறோம்அதேபோல் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தனக்கு பதில் இன்னொருவரை தேர்வு எழுதுவதைபத்திரிக்கை வழியாக நாம் கண்டிருக்கிறோம் அதேபோல் தான் திருடும் திருட்டை மற்றவர் மேல் எப்படி சுமத்துவது என்பதை இயக்குனர் இந்தப்படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்